தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றமையினால் இன்று (27) மாலை 1.00 மணி தொடக்கம் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மண்சரிவு மற்றும் அனர்த்த ஆய்வு அமைப்பின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார எச்சரித்துள்ளார்.
மண்சரிவு அபாயமுள்ள 7 மாவட்டங்களைச் சேரந்த மக்களுக்கே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அபாயமுள்ள மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அவர் மேலும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.