சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 493,455 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதுடன் 185 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று (27) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர இதனை தெரிவித்தார்.
மேலும், இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளனர். இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்போர் மத்தியில் தொற்றுநோய்கள் பரவாதிருப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர் உட்பட வைத்தியர்கள் அடங்கிய குழுக்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் சுகாதார சேவைகளை வழங்குவதற்கான விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.