தெற்கு அதிவேக பாதையை பயன்படுத்த முன்னர் 1969 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு விசாரிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று (27) தெரிவித்துள்ளார்.
இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக தொடம்தொட, பானந்துர, வெலிபன்ன அதிவேக வீதியினூடாக உட்பிரவேசித்தல் மற்றும் வௌியேறுதலில் தடைகள் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தறை உட்பிரவேசிப்பு நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.