நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை மேற்கொள்ள அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்த்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ட்விட்டர் ஊடாக இன்று (26) இப்பணிப்புரையை வழங்கியுள்ளார்.
நிவாரணப்பணிகளுக்கு தேவையான அனைத்து நிதியையும் நிதியமைச்சிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி மண்சரிவு மற்றும் வௌ்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை வழங்குதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி அபேகோனிற்கும் அறிவித்துள்ளார்.
வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்த அனைவரினதும் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் தனது கவலையையும் வௌியிட்டுள்ளார்.
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி இன்று நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஜனாதிபதி ஊடகப்பிரிவு