உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (25) அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டனை சந்தித்து கலந்துரையாடினார்.
அவுஸ்திரேலிய பாராளுமன்ற கட்டிடத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
சுற்றுலா மற்றும் கிறிஸ்த்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித். பி. பெரேரா, வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இலங்கை சார்பில் ஜனாதிபதியுடன் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.