மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் "மகிழ்ச்சியான கற்பித்தலுக்கான" கட்டிடட அடிக்கல் நாட்டு விழா நேற்று (24) இடம்பெற்றது.
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் பாடசாலை வளாகத்தில் காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இருபத்திநான்கு மில்லியன் ரூபா செலவில் நான்கு வகுப்பறைகளையும் நவீன தொழிநுட்ப இலத்திரனியல் உபகரணங்களை கொண்டதுமான முதல்தளம் அமைக்கப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இக்கட்டிடம் அமையப்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன், வலயக்கல்வி அலுவலகத்தின் பொறியியலாளர் ஏ.எம்.எம்.ஹக்கீம், பொறியியலாளர்களான டீ.ஏ.பிரகாஸ், உ.மயூரன், மதத்தலைவர்கள், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
LDA_dmu_batti
.