மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கண்டியில் 369 மில்லியன் ரூபா செலவில் 6 அபிவிருத்தி திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்டி ஆதர் சீட் காட்சிக்கூட மத்திய நிலையம் 44.50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது, அதேபோல், 30.89 மில்லியன் ரூபா செலவில் ஹீல்பேன் கந்துர மற்றும் ரஜபிஹில்ல நீரோடை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. 152. 81 மில்லியன் ரூபா செலவில் கெடம்பே- ஹீரஸ்ஸகல வரையிலான நீர் வழங்க வடிகாலமைப்பு, 80 மில்லியன் ரூபா செலவில் கட்டுகஸ்தொட- மடவல - திகன வீதி, தர்மாசோக்க மாவத்தைக்கான பிரதான நீர்வழங்கல் திட்டம் என்பன பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 18 மில்லியன் ரூபா செலவில் தூய்மையாக்கப்பட்டு விநியோகிக்கப்படும் போது வீணாகும் நீரில் அளவைக் குறைப்பதற்கான உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவின் வழிகாட்டலில் மூலோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கூறப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.