மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (24) அங்கு வாழும் இலங்கையரை சந்தித்தார்.
கென்பரா நகரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது.
அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர் ஜனாதிபதியை மிகவும் மகிழ்வுடன் வரவேற்றதுடன் ஜனாதிபதியும் அவர்களுடன் நட்புறவுடன் கலந்துரையாடினார்.