மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்கள், மீனவ கிராமத்தவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டு கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக 150 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டத்திலுள்ள வாவிகள் எல்லையிடல், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோங்கில் தொழில் உபரணங்கள், மீன்விற்பனை நிலையம், இலகு தவணைக் கடன், விவசாயம் மற்றும் பொருளாதார முன்னேற்றுவதற்கான உதவிகள், மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் படகுச் வேவை என்பன இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களுக்கு விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் மற்றும் உலகலாவிய சுற்றாடல் ஏற்பாடு என்பன நிதியுதவி வழங்கியுள்ளன.
யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தினால் அதிகம் பாதிப்புக்குள்ளான கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசத்தில் 80 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு பனிச்சங்கேணி மற்றும் வாகரை கிராமங்களில் நடைபெற்றது.
கோறளைப்பற்று வடக்கு பிரதேசத்திலுள்ள 2600 ஹெக்டெயர் வாவி 6 மில்லியன் ரூபா செலவில் எல்லையிடப்பட்டுள்ளது. 3 மில்லியன் ரூபா செலவில் எல்லையிடப்பட்ட பகுதியில் வாவி முகாமைத்துவ குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வாவியை அண்டியுள்ள பிரதேச மக்கள் பலர் நீரியல் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் சட்டவிரோத வலை பயன்பாடு என்பன அதிகரித்துள்ளதுடன் மற்றும் கணடல் தாவரங்களைப் அழிவடைந்துவருகின்றன இதனைத் தடுக்கும் நோக்குடன் அவர்களுக்கு மாற்றுத் தொழிலாக விவசாயம் மற்றும் சுயதொழில் வசதிகளை ஏற்படுத்தி வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்காக 6 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன் 9 மில்லியன் செலவில் விவசாயக் கிணறுகள் அமைக்கப்பட்டள்ளன. சுயதொழில் கடனாக 8 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை முன்னேற்றும் நோக்கில் 10 மில்லியன் ரூபா செலவில் பனிச்சங்கேணி வாவியில் படகுச் சவாரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் தொழிலை விருத்தி செய்ய 1 மில்லியன் செலவில் மீன்பிடி வலைகள் மீனவ சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பனிச்சங்கேணியில் 2 மில்லியன் ரூபா செலவில் மீன் விற்பனை நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
2000 குடும்பங்களளுக்கு 3 மில்லியன் ரூபா செலவில் கனிமரக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. பசுமை மரத் தொடர் திட்டத்திற்கு 3 மில்லியன் செல்விடப்பட்டுள்ளது. பிரதேச மக்களுக்கு 1 மில்லியன் செலவில் உயிர்வாயு அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதேசத்திலுள்ள தோனாக்கள் புனரமைப்பு 3 மில்லியன் ரூபா, கடற்கரை பாதை புனரமைப்பு 4 மில்லியன், திமிலை தீவு மீனவர் சங்க கட்டடம் 8 இலட்சம், புத்தகங்கள் வெளியடல் 4 மில்லியன் ரூபா, ஹாவஷ்டிங் இயந்திரங்கள் 1 மில்லியன், 4 மில்லியன் ரூபா 120 பேருக்கு மலசல கூட வசதி எற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களத்தினால் மட்டக்களப்பு வாவி 33 மில்லியன் ரூபா செலவில் எல்லையிடப்பட்ட பிரகடனத்தை அண்மையில் ஏறாவூர்ப் பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி, பணிப்பாளர் ஜீ.காமினி ஹேவகே, திட்ட முகாமையாளர் பி.பிறேமதிலக, சிரேஷ்ட பொறியியலளார் திருமதி மங்களா விக்கிரமநாயக, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி, மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எம்.ஜெயசந்திரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி, மற்றும் திணைக்கள அதிகாரிகள் பயளானிகள் கலந்துகொண்டனர்.
LDA_dmu_batti