ஜூன் மாதம் ஐந்தாம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இம்மாதம் 29ம் திகதி தொடக்கம் ஐந்தாம் திகதி வரை சுற்றாடல் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக மகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்
பிரதியமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.
ஐந்தாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் உலக சுற்றாடல் தின வைபவம் களுத்துறை வர்ணண் மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாக இன்று (23) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கமைய 29ம் திகதி சூழல் தொடர்பில் தௌிவுபடுத்தும் தினம் இடம்பெறவுள்ளது. மே 30ம் திகதி சூழலை தூய்மையாக்கும் தினம், மே மாதம் 31ம் திகதி கழிவு முகாமைத்துவ தினம், ஜூன் முதலாம் திகதி மரநடுகை தினம். ஜூன் இரண்டாம் திகதி நீர் மற்றும் நீர் நிலை பாதுகாப்புத் தினம், ஜூன் 3ம் பல்லுயிர்தன்மையை பேணும் தினம், ஜூன் நான்காம் திகதி நிலையான காணி முகாமைத்துவ தினம் மற்றும் ஜூன் ஐந்தாம் திகதி உலக சூழல் தினம் என கொண்டாடப்படவுள்ளது.
'இம்முறை இயற்கையுடன் இணைந்த மக்கள்' என்ற தொனிப்பொருளில் உலக சூழல் தினம் கொண்டாடப்படவுள்ளது.
1972ம் ஆண்டு சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரில் நடைபெற்ற சூழல் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஆரம்ப தினத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் ஐந்தாம் திகதி உலக சூழல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
கடந்த 1074ம் ஆண்டு இலங்கையில் முதற்தடவையாக உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.