தனக்கு பிரசாரம் வழங்குமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு அழுத்தம் செலுத்தவில்லையெனவும் உண்மையான ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்த தன்னால் இயலுமாகியதாகவும் முன்னாள் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை வைபவத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இணைய ஊடகங்களுக்கான சட்டமூலத்தை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்க தான் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் தகவல் அறியும் சட்ட மூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு ஆறு மாத காலத்தில் நிறைவேற்ற முடியுமாகியது.
மேலும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திடமிருந்து பறிக்கப்பட்டிருந்த கிரிக்கட் ஔிபரப்பை அமைச்சரவை அனுமதியுடன் மீண்டும் பெற்றுக்கொடுக்க முடிந்தது. மேலும் அரச அச்சுத் திணைக்களம், அரச அச்சுக்கூட்டுத்தாபனம் என்பவற்றுக்கான கடதாசிகளை வழங்குவதற்கு முறையாக விலைமனுக்கோரல்களை கோருவதற்கான சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதனூடாக அதிக இலாபத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்ககை எடுக்கப்பட்டதுடன் நீண்ட காலம் நடத்தப்படாமல் இருந்த சினிமா ஜனாதிபதி விருது வழங்கல் நிகழ்வையும் நடத்த முடிந்தது. இவ்வாறு அமைச்சின் கீழிருந்த நிறுவனங்களின் குறைப்பாடுகள் ஆராய்ந்து தீர்க்கப்பட்டன.
அமரதேவ நினைவில்லம் நிர்மாணிப்பதற்கான நிதி கிடைத்துள்ளதுடன் அதனை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் காணியை வழங்குவதற்கும் இயலுமாகிய
து.
பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் பொறுப்பு என்னிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் மத்தியில் சேவையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.