இலங்கை குடியரசு தின நிகழ்வு இன்று (22) மட்டக்களப்பிலும் மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில்கொண்டாடப்பட்டது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இலங்கையின் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேரிடமிருந்து 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றாலும், ஆங்கிலேய முடியின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்தது. 1972ஆம்ஆண்டு குடியரசு அரசியலமைப்பின் உருவாக்குத்துக்குப்பின்னர் குடியரசாக மாற்றம் பெற்றது. அதன்படி கடந்த 2008ஆம்ஆண்டு முதல் மே மாதம் 22ஆம் திகதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு பூராகவும் இந்த நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) காலை தேசியக்கொடியேற்றலுடன் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த குடியரசு தின நிகழ்வில், தேசியக் கொடியினை ஏற்றிவைத்தலைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கான மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனையடுத்து அரசாங்க அதிபர் சிறப்புரையாற்றினார்.
அச் சிறப்புரையில் உரையாற்றிய அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இலங்கையிலே வாழுகின்ற அனைவரும் இலங்கையர் என்ற அடையாளப்படுத்தலோடு இந்த நாட்டுக்குள்ளே சமாதானத்துடனும், ஐக்கியத்துடனும் சமத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதுதான் இந்தக் குடிமக்களின் ஒரேயொரு அபிலாசையும் எதிர்பார்ப்புமாகும்.
அரசாங்கம் கொடுக்கின்ற கொள்கைகளை, அரசாங்கம் தீர்மானிக்கின்ற அத்தனை விடயங்களையுமு; அரசாங்கம் ஏற்படுத்துகிற கருத்திட்டங்களையும், சரியான முறையில் கிடைக்கின்றது என்பதனை உறுதிப்படுத்தவேண்டியது. இந்த மாவட்டததில் பணியாற்றுகின்ற அத்தனை அரச உத்தியோகத்தர்களுக்கும் பாரிய பொறுப்பிருக்கின்றது என்று கூறினார்.
இந் நிகழ்வில், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசரரிh, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பொறியிலாளர் எஸ்.சுமன், திவிநெகும திணைக்கள உதவிப் பணிப்பாளர் எம்.குணரெட்ணம், திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.