மாத்தளை மாவட்டத்தில் இதுவரை 1799 சிறுநீரக நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி எம். விஜயகோன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மாத்தளை வில்கமுவ பிரதேச செயலகப்பிரிவில் 1292 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் இப்பிரதேச செயலகப் பிரிவிலியே அதிக நோயாளர்கள் உள்ளனர் என்றும் மேலும் லக்கல பல்லேகவில் 187 பேரும், கலேவெலவில் 130 பேரும் நாவுலவில் 117 பேரும் பதிவாகியுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் சிறுநீரக நோயாளர்களை அடையாளங்காண்பதற்கான நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.