தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட ஆசிரிய ஆலோகசர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று இன்று (19) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடத்தப்பட்டது
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் தலைமையில் ஆரம்பமான இத்தெளிவுபடுத்தல் நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தான ஆகியோர் கலந்துகொண்டனர்.
இத்தெளிவுபடுத்தல் நிகழ்வில் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முந்நூறுக்கும் அதிகமான சிங்கள மொழி ஆசிரிய ஆலோசகர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.