தேசிய இராணுவ வீரர்கள் தின நிகழ்வு இன்று (19) மாலை 4.00 மணிக்கு பாராளுமன்ற மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவிடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.
முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், யுத்தத்தில் உயிர் துறந்த இராணுவத்தினரின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின் போது யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்கு இராணுவ மரியாதை செலுத்தப்படவுள்ளது.
தேசிய இராணுவ வீரர்கள் தின கொண்டாட்டத்தின் நிமித்தம் இன்று பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 6.00 மணிவரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.