இன்றும் (18) நாளையும் (19) விசேட விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் ஒன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதிகமாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள 12 பிரதேசங்களை கேந்திரமாக கொண்டு, 1800 குழுக்களை பயன்படுத்தி இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் நாடு முழுவதும் 43,000 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதவாகியுள்ளனர்.
கடுமையான காய்ச்சலுடன் தலைவலி, உடல் வலி , குமட்டல், வாந்தி, சிவப்பு நிற கொப்புளங்கள் மற்றும் இரத்த கசிவு காணப்படுமாயின் உடனடியாக தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறும் டெங்கு நோயிலிருந்து மீளும் அதேவேளை, டெங்கு இரத்தக் கசிவு காய்ச்சல் ஏற்படும் என்பதால் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.