ஐக்கிய நாடுகள் சபையின் 14வது வெசக் தின கொண்டாட்டத்தின் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார நிகழ்வு நேற்று (14) தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது.
இக்கலாசார நிகழ்வில் பிரதான அதிதிகளாக நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகளின் வெசாக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக நாட்டிற்கு வருகைத்தந்த நேபாள ஜனாதிபதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சினேகபூர்வமாக வரவேற்றார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, எஸ்.பீ.நாவின்ன, வஜிர அபேவர்தன ஆகியோர் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகள் பலரும் இந்த கலாச்சார நிகழ்வில் பங்குபற்றினர்.