ஐக்கிய நாடுகள் சபையின் 14வது வெசக் தின கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று காலை (15) வரலாற்று சிறப்புமிக்க களனி
விகாரைக்கு சென்று வணங்கினார்.
புத்த பெருமான் மூன்றாவது இலங்கை வருகையின் போது விஜயம் செய்த இடமே களனி விகாரை ஆகும்.
களனி விகாரையின் வரலாற்றுச் சிறப்பை நேபாள ஜனாதிபதிக்கு விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரக்கித தேரர் விளக்கினார்.
இதன் போது நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தலத்தா அதுகோரள உட்பட பலர் கலந்துகொண்டனர்.