• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அரச வைத்தியசாலைகளில் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ தொகுதி

அரச வைத்தியசாலைகளில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகாமைத்துவ தொகுதியொன்றை (Hospital Health Information Management System) அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்களுக்கு விரைவாகவும் முறையாகவும் சேவைகளை வழங்குவதற்கு இப்புதிய தொகுதிய உதவியாக இருக்கும் என்று இலங்கை தகவல்தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அதற்கமைய அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகைத்தரும் நோயாளர்களின் சுகாதாரம் தொடர்பான தகவல்கள், மருந்து விபரங்கள், சுகாதார அறிக்கை விபரங்கள், உயிரியல் தரவுகள் உட்பட பல முக்கிய விடயங்களை இத்தொகுதியினுல் உள்ளடக்கப்படவுள்ளது. நோயாளிக்கு வழங்கப்படும்  மருந்து விபரங்கள் இத்தொழில்நுட்ப தொகுதியினூடாக மருந்தகத்திற்கு அனுப்பப்படும். மேலும் ஊசி மூலம் மருந்து செலுத்துதல், இரத்த மாதிரியை பெற்றுக்கொள்ளல், ஆய்வுகூட பரிசோதனை மற்றும் தொற்று நோயிருந்தால் அறிந்துகொள்ளல் போன்றவற்றை நோயாளிடம் அறிந்துக்கொள்ளவேண்டியிருப்பின் இத்தொகுதியினூடாக உரிய பிரிவுகளுக்கு அனுப்பப்படும்.
 
 நோயாளருடைய தகவல்கள் குறித்த தகவல் முகாமைத்துவ தொகுதியில் (HHIMS) உள்ளடக்கப்பட்ட பின்னர் நோயாளிக்கு விசேட அட்டையொன்று வழங்கப்படும். மீண்டும் சிகிச்சைக்காக அந்நோயாளி  வைத்தியசாலைக்கு வருவாராயின் நோயாளிக்கும் வைத்தியருக்கும் இது நன்மை பயக்கும் வகையில் அமையும். குறிப்பாக நோயாளியின் நோய் குறித்த விபரங்களை குறுகிய காலத்தில் அறிந்து அவசியமான சிகிச்சைகளை வழங்க வைத்தியருக்கு இயலுமாகும். இது நோயாளிக்கும் நன்மை பயக்கும் விடயமாகும்.
 
அத்துடன் கடதாசி பாவனை மிகவும் குறைவடைவதுடன் சுற்றாடல் பாதுகாப்புக்கு இது உதவியாக இருக்கும். இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் டிஜிட்டல் சுகாதார சேவை (Digital Health Programme) திட்டத்தின் கீழ் இத்தொழில்நுட்ப  தொகுதி செயற்படுத்தப்படுவதுடன் உத்தியோகபூர்வமாக இத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு அண்மையில் சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் அம்பாறை வைத்தியசாலையில் ஆரம்பமானது.
 
டிஜிட்டல் இலங்கை என்ற நோக்கை நனவாக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பயணத்தில் சுகாதார துறைக்கும் பயனை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இந்திட்டத்தினூடாக கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் சுகாதார சேவையின் தரத்தை பேணவும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும் என்று நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி முகுந்தன் கனகே தெரிவித்தார்.
 
எதிர்வரும் 2019ம் ஆண்டளவில் இலங்கையிலுள்ள அரச வைத்தியசாலைகள் முந்நூறிற்கு இவ்வசதி  செய்துகொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறித்த திட்டத்தின் முகாமையாளர் சிறியந்த ரத்னாயக்க தெரிவித்தார்.
 
இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் அருணேஷ் பீடர் டெப் இயந்திரங்களை சுகாதார அமைச்சரிடம் கையளித்தார். 
 
கணிய வள மற்றும் பெற்றோலிய வாயு பிரதியமைச்சர் அனோமா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பி. தயாரத்ன, அம்பாறை மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர்  லங்கா ஜயசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.