ஐநா வெசக் தின விழா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று (13) காலை 11.06 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார்.
இன்றைய நிகழ்வின் பிரதான அதிதியாக கலந்துகொள்ளவுள்ள நேபாள ஜனாதிபதியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவும் வரவேற்றனர்.