இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு இலங்கையை வந்தடைந்தார்.
மாலை 6.30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய பிரதமரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய பிரதமர் விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து கங்காராமைக்கு சென்ற இந்திய பிரதமர் அங்கு நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் வெசக் வலயத்தையும் திறந்து வைத்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.