அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தினால் 16வது முறையாக ஏற்பாடு செய்யப்படுள்ள வெசக் வலயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
வெசக் வலயத்தை திறந்ததுடன் புனித தந்தத்தை ஜனாதிபதி வைத்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அஸ்கிரி கெடிகே மகா விஹாரையில் இருந்து குறித்த புனித தந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பேலியகொட வித்தியலங்கார பிரிவெனவின் தலைவரும் களனி பல்கலைக்கழக உப வேந்தருமாகிய கலாநிதி சங்கைக்குரிய வெலம்பிட்டியாவே நாயக்க தேரர், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன நாயக்க தேரர், சங்கைக்குரிய கோமாரியே ராகுல தேரர் உட்பட பிக்குகள், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பௌத்த மகா சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பினீத் அபயசுந்தர, உப தலைவர் ஜகத் சுமதிபால ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.