பொலன்னறுவை மாவட்டத்தில் வசதிகுறைந்த விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கு தலா 15 இலட்சம் ரூபா வீதம் நிதி உதவி வழங்கும் நிகழ்வு நேற்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவிடம் குறித்த நிதியை ஜனாதிபதி வழங்கினார். விகாரைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஜனாதிபதி அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் இராணுவத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.
சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் லியூசோ விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய தியுவான் தேரரினால் இதன்போது ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றும் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலாநிதி வல்மொருவே பியரத்ன தேரர் உள்ளிட்ட சீன மகாசங்கத்தினர் மற்றும் சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டனர்.