நாளை (12) ஆரம்பமாகும் ஐநா வெசக் விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை பண்டாரநாக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில ஆரம்பமாகும் ஐநா வெசக் விழாவில் ஆரம்பநாள் நிகழ்வில் விசேட அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி கலந்து சிறப்பிக்கவுள்ளார். இரண்டாம் நாளான நாளை மறுதினம் (13) மாநாடொன்றும் நடைத்தப்படவுள்ளது. இம்மாநாட்டில் 85 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிறைவு நிகழ்வு எதிர்வரும் 14ம் திகதி கண்டி தலதா மாளிகை சூழலில் நடைபெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் நேபாள ஜனாதிபதி தேவி பண்டாரி தலைமையில் நடைபெறவுள்ளது.