கொழும்பு ஸ்ரீ சம்போதி வெசாக் புனித நிகழ்வின் அங்குரார்ப்பண விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (09) பிற்பகல் நடைபெற்றது.
கொழும்பு 07 ஸ்ரீ சம்போதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை திறந்து வைக்கும் வகையில் நினைவுப்பலகையை ஜனாதிபதி திரை நீக்கம் செய்து வைத்ததுடன் முதலாவது மலர் பூஜை வழிபாட்டினையும் மேற்கொண்டார்.
மேலும் விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த மண்டபத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார். மேலும் காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த சர்வதேச நூலகத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பாப்பரசரின் கூடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
சம்போதி வெசாக் வலயத்தின் நூறு கூடாரங்கள் கொண்ட தேசிய வீரர்களை நினைவுகூரும் கண்காட்சியையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
ராமான்ய நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய பேமசிறி நாயக்க தேரர் ஸ்ரீ சம்போதி விகாராதிபதி, பௌத்தயா தொலைக்காட்சியி7ன் தலைவர் சங்கைக்குரிய தரணகம குசலதம்ம நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், பேராயர் மெல்கம் ரஞ்சித், சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.