தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டும் செயலமர்வொன்று நேற்று (07) மட்டக்களப்பு நாவலடி நியூ சண் ரைஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை பத்திரினை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் செயலமரவில் மட்டக்களப்பு, ம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 60க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்
இலங்கை பத்திரினை ஸ்தாபனத்தின் ஊடக ஆலோசகரும் வளவாளருமான எம்.எஸ்.அமீர் ஹ{சைன் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் சட்டத்தரணி கே.ஐங்கரன் தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.
இச் செயலமர்வின் போது இச் சட்டம் தொடர்பிலான பூரண விளக்கம் வழங்கப்பட்டதுடன், சட்டம் குறித்த சந்தேகங்கள், நடைமுறைப்பிரச்சினைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை பத்திரினை ஸ்தாபனம் நாடு பூராகவும் மாவட்ட, மாகாண ரீதியாக இது போன்ற தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொர்பான செயலமர்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.