வெசக் வாரம் இன்று (07) ஆரம்பமாகிறது.
எதிர்வரும் 13ம் திகதி வரை இவ்வெசக் வாரம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பௌத்த சாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வெசக் தின விழா மற்றும் சர்வதேச மாநாடு எதிர்வரும் 12, 13ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதையிட்டு இவ்வாரம் பிரகடனப்படுத்தப்படுகிறது.
ஐநா சர்வதேச வெசக் தின விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பௌத்த நாடுகளின் அரச தலைவர்கள் இலங்கை வரவுள்ளனர்.
ஆரம்ப நிகழ்வு கொழும்பிலும் நிறைவு நிகழ்வு கண்டியிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.