மிக குறுகிய காலத்திற்குள் இலங்கையில் தகவல் அறியும் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியதுடன் தகவல் அறியும் ஆணைக்குழுவையும் அமைத்தமை தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
உலக வங்கியின் Equitable Growth Finance & Institutions (EFI) நிறுவனத்தின் தலைவர் ஜேன் வெலிசர் (Jan Walliser) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 4 மற்றும் 5ம் திகதிகளில் இலங்கைக்கு வந்திருந்தார். இதன்போது கடந்த 4ம் திகதி பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதன்போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் ஆலோசகர் ஜயதிஸ்ஸ ரணசிங்க மற்றும் தகவல் ஆணைக்குழு அதிகாரிகள் உடனிருந்தனர்.