இற்றைக்கு அறுபது வருடங்களுக்கு முன்னர், அதாவது 1956ம் ஆண்டு இலங்கையின் அப்போதைய அமைச்சர் அவைக்கான செங்கோலை வடிவமைத்த நாட்டின் பிரபல பொற்கொல்லர் அஸ்வேத நைதலாகே பியதிலக்க காலமானார்.
காலமாகும் போது அவருக்கு வயது 88 ஆகும். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் (56 நாட்களுக்கு முன்னர்) அச்செங்கோல் நிர்மாணிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியின் நிமித்தம் வடிவமைப்பாளரை பாராளுமன்றத்திற்கு அழைத்த சபாநாயகம் கரு ஜயசூரிய செங்கோலை தொட்டு பார்ப்பதற்கு அவருக்கு அனுமதி வழங்கியதுடன் அன்றைய தினம் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் மதிய போச விருந்து கௌரவித்தார்.
இலங்கையில் பாராளுமன்ற முறை ஆரம்பிக்கப்பட்டு 7 தசாப்தங்கள் பூர்த்தியடைவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. பாராளுமன்ற வரலாற்றில் பல விசேட நபர்கள் உள்ளனர். அதேபோல் பாராளுமன்ற பெறுமையை காட்டும் பல சின்னங்களும் உள்ளன. அதில் செங்கோல் பாராளுமன்றத்தின் பலத்தை காண்பிப்பதாக செங்கோல் காணப்படுகிறது.
1972வது அரசியலமைப்பிற்கு முன்னர் அமைச்சர் அவை (செனட் சபை) மற்றும் பிரதிநிதித்துவப்படுத்த உறுப்பினர்களை கொண்ட முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பாராளுமன்றின் செனட் சபையில் பயன்படுத்தப்பட்ட செங்கோல் தற்போது பயன்படுத்தப்படாவிடினும் கூட இவ்வரலாற்று சிறப்பு மிக்க அடையாளத்தை பாராளுமன்ற நூதனசாலையில் பாதுகாக்கப்படுகிறது.
1949ம் ஆண்டு பிரித்தானிய அரசினால் வழங்கப்பட்டு அப்போதைய அமைச்சர் அவையில் பயன்படுத்தப்பட்ட செங்கோலே தற்போது பயன்படுத்தப்படுகிறது. இலங்கை கலைஞரினால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு செனட் சபை செங்கோல் இதுவேயாகும். 1956ம் ஆண்டு வழங்கபபட்ட திட்டத்திற்கமைய 52 அங்குல நீளத்துடன் யானைத் தந்தத்திற்கு 20 கரட் 45 தங்கம் மற்றும் வெள்ளி மூன்றரை இறாத்தல் என்பவற்றில் வேலைப்பாடுகளிட்டு நீல மாணிக்கம் மற்றும் நவரத்தினக்கல் பதித்து உருவாக்கப்பட்ட ஒரேயொரு செங்கோல் இதுவாகும்.
இதனை செய்து முடித்த சிறந்த கலைஞன் இன்று இவ்வுலகை விட்டு விடைபெற்று சென்றுவிட்டார்.
இக்கலைஞனால் நிர்மாணிக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் ஜப்பான் இளவரசி மிஸாக்கா, இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் அன்றைய காலப்பகுதியில் இலங்கைக்கு பாகிஸ்தான் அரச தலைவருக்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.