தேசிய நூலகத்தின் 27வது ஆண்டு நிறைவு விழா இன்று (04) கொண்டாடப்படுகிறது.
நூலகங்களின் அபிவிருத்திக்கான நிலையான வலையமைப்பை கட்டியெழுப்புதல் என்ற தொனிப்பொருளில் 27வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ள இன்றை நிகழ்வில் பின்தங்கிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மற்றும் பொது நூலகங்களுக்கு 15,000 ரூபா பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.