தேசிய யுத்த வீரர்கள் தின நிகழ்வுகள் எதிர்வரும் 19ம் திகதி பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு தேசிய இராணுவ சேவை அதிகாரசபை தேசிய யுத்த வீரர்கள் தின கொண்டாட்டத்தை அனைத்து மாகாணங்களிலும் நாளை தொடக்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கமைய, நாளை மத்திய மாகாணத்தின் மைலபிட்டிய போர் வீரர்கள் நினைவிடத்திலும் 18ம் திகதி வட மேற்கு மாகாணத்தின் போயகனே போர் வீரர்கள் நினைவிடத்திலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து 9ம் திகதி சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுதி புதிய நகரில் நிறுவப்பட்டுள்ள போர்வீரர்கள் நினைவிடத்திலும் 16ம் திகதி தென் மாகாணத்தின் காலியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திலும் 8ம் திகதி வடக்கின் பலாலி மற்றும் ஊவா மாகாணத்தின் பதுளை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்களிலும் 16ம் திகதி வட மத்திய மாகாணத்தின் அநுராதபுர பொது மைதானம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள போர்வீரர்கள் நினைவிடங்களிலும் தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வுகள் கொண்டாடப்படவுள்ளன.