மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 2680 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுள் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மட்டு மாவட்ட தொற்று நோய் தடுப்பு
நிபுணர் டாக்டர் கே.தர்சினி தெரிவித்தார்.
ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியிலேயே இத்தொகையிளர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இம்மாவட்டத்தில் மிகவேகமாக டெங்கு பரவும் பிரதேசமாக மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசம் உள்ளது.குறித்த காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் மாத்திரம் 825பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டதுடன் 600 பேருக்கு டெங்கு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் சற்று குறைவடைந்துள்ள போதிலும் விழிப்பூட்டல் நடவடிக்கைகள தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று (03) காலை ஆரையம்பதி தாளங்குடா பிரதேசத்தில் இடம்பெற்றது.தாளங்குடா றோமன் கததோலிக்க பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து தாளங்குடா உள்வீதி மற்றும் பிரதான வீதியில் இப்பேரணியை நடாத்தியதுடன் வீதிகளில் துப்புரவு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
LDA_dmu_batti