முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125ஆவது பிறந்த தினத்தனை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு நகர மத்தியிலிருந்து பாடசாலை மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்று, மட்டக்களப்பு நீரூற்றுப் பூங்காவில் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் விபுலாநந்தரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தல், மற்றும் விபுலாநந்தம் சிறுப்பு மலர் வெளியீடும் நடைபெற்ற மாணவர்களுக்கு அப்பியாசப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில், ஆசியுரையினை கல்லடி ராமகிருஸ்ண மசன் தலைவர் சுவாமி பிரபு பிரபானந்தா ஜீ மகராஜ் வழங்கினார். பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிறப்பு விருந்தினராக சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவரும் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளருமான கே.பாஸ்கரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
காலை 8 மணிக்கு பாடசாலை மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்று மட்டக்களப்பு நீரூற்றுப் பூங்காவிலுள்ள சுவாமி விபுலாநந்தரின் சிலையருகே ஊர்வலங்கள் வந்தடைந்தன. அதனையடுத்து மங்கல விளக்கேற்றலைலையடுத்து சுவாமி விபுலானந்தரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனையடுத்து ஆசியுரை, அதிதிகள் உரையயுடன் விபுலானந்தம் செய்திமடல் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதே நேரம், சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் கல்லடியிலுள்ள சமாதியில் மலரஞ்சலி நிகழ்வும், மரம் நடுகையும் இடம் பெற்றது. அத்துடன், கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்திலும் நிகழ:வுகள் நடைபெற்றன.
LDA_dmu_batti