பரதமுனியின் ஐந்தாம் வேதம் ஞான தத்துவ சொரூபம் பரதநாட்டியம் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் கடந்த
சனிக்கிழமை (29) மாலை நிருத்திய விழா நடைபெற்றது.
நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கரின் தலைமையில் இராசதுரை அரங்கில் நடைபெற்ற நிருத்தியவிழாவில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம் கலந்து கொண்டார்.
சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவக நடனத்துறையின் ஏற்பாட்டில் நடன நாடகத்துறைத் தலைவர் கலாநிதி கி.ஷர்மிளா ரஞ்சித்குமாரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ்விழாவில், கௌரவ அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி முனியாண்டி ரவி, சுவாமி விபுலானந்த இசை நடனக்கல்லூரியின் முன்னைனாள் அதிபர் நாட்டியவாரிதி கமலா ஞானதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணிமுதல் 9 மணிவரை நடைபெற்ற நிருத்திய விழாவில் நாட்டிய, நடன நிகழ்வுகள் நடைபெற்றதுடன், கலைஞர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது.
இதில், திருகோணமலை ராஜரெட்ணம் நடனாலயாவின் ஸ்தாபர் நாட்டிய கலைமாமணி ரேணுகாதேவி செலவபுத்திரன், திருகோணேஸ்வரா நாட்டிய கலாமன்றத்தின் நாட்டிய வாரிதி கலாபூசணம் சாரதாதேவி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
LDA_dmu_batti