மாகாண ரீதியாக 2000 ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுயதொழில் முயற்சியாளர்களை தெளிவுபடுத்துவதற்காக நாடுபூராவும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது நிமித்தம் மத்திய மாகாணங்களை கேந்திரமாக கொண்டு நடத்தப்படும் செயலமர்வு நாளை (28) காலை 9.30 மணிக்கு கண்டி பல்லேகல மாகாணசபை அலுவலக கேட்போர்கூடத்தில் சர்வதேச வர்த்தக அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகியவற்றின் கண்காணிப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயலமர்வில் மத்திய மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட மாகாண அரசியல் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.