மீதொட்டமுல்ல அனர்த்தில் வீடிழிந்த மற்றுமொரு தொகுதியினருக்கு வீடுகளை வழங்கும் நிகழ்வின் இரண்டாம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (25) மாலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
முழுமையாக வீடுகளை இழந்த 65 பேருக்கே இவ்வீடுகள் வழங்கப்பட்டன.
வீடுகள் வழங்கப்பட்டவர்களுக்கு வீட்டு பொருட்களை வாங்குவதற்காக இரண்டரை இலட்சம் ரூபா நிதியும் இம்மக்களுக்கு வழங்கப்பட்டது.
முதலாம் கட்டத்தில் வீடுகளை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த 30 பேருக்கு ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக அரசாங்கம் 3920 இலட்சம் ரூபா நிதியை அரசாங்கம் செலவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சொத்து விபரங்கள் மதிப்பிடப்பட்ட பின்னர் மேலதிக தொகை வழங்க வேண்டியிருந்தால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது சக்கர நாற்காலியில் இருந்த பெண்ணொருவருக்கு பிரதான நுழைவாயில் வைத்தே வீட்டுரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பாடலி சம்பிக்க ரணவக்க, வஜிர அபேவர்தன, பிரதியமைச்சர்களான லசந்த அலகியவன்ன, துனேஷ் கன்கந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.