மீதொட்டுமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜப்பான் விசேட நிபுணர்கள் குழு இன்று (20) இலங்கை வரவுள்ளனர்.
அக்குழு மீதொட்டுமுல்ல கழிவு மலை மற்றும் ஏனைய இடங்களை முழுமையாக ஆராய்ந்து தொழில்நுட்பரீதியான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்று (19) அவ்வமைச்சில் நடைபெற்ற ஜப்பான் அரசின் உதவியுடன் உடனடி நிவாரணங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
மேலும், குறித்த நிவாரணத்தை பகிர்ந்தளிப்பதற்கான இலங்கைக்கு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச் சுகநுவ கருத்து தெரிவிக்கையில் மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்ந்து நீண்டகால தீர்வை பெற்றுகொடுக்கும் நடவடிக்கையை இன்று வரும் ஜப்பான் குழு முன்னெடுக்கும் என்று உறுதியளித்தார்.