யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமை ஏற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மரியாதையின் நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
யாழ் கோவில் வீதியிலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பின்போது காணிகள் விடுவிப்பு தொடர்பில் முன்பிருந்த கட்டளை தளபதி கரிசனையுடன் செயற்பட்டதை போல நீங்களும் அக்றையுடன் செயற்படவேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்
இது தொடர்பில் தாம் அக்கறையுடன் விடுவிக்க ஏதுவாக உள்ள காணிகளை விரைவில் விடுவித்து மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த தாம் எதிர்பார்ப்பதாகவும் கட்டளை தளபதி தம்மிடம் உறுதியளித்தாக முதலமைச்சர ஊடகங்களுக்கு தெரிவித்தார்
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ்சேனநாயக்க பதவி உயர்வு பெற்று சென்றதை தொடர்ந்து புதிய கட்டளை தளபதியாக ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட த்தக்கது
SPR_dmu_jaffna