மீதொடமுல்லை குப்பை மேட்டின் பகுதியொன்று சரிவுக்குள்ளானதால் மரணமடைந்த அனைவரினதும் இறுதி சடங்குகளை அரசின் முழுச் செலவில் நடத்துவதற்கும் இடருக்குள்ளான மக்களுக்குத் தேவையான உணவு,
தங்குமிடம், சுகாதார வசதிகள் மற்றும் உடைமை பாதுகாப்பு உள்ளடங்களாக அனைத்து விதமான தேவைகளையும் உடனடியாக வழங்குவதற்கு அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் விசேட அறிவுறுத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீதொடமுல்லை குப்பை மேட்டுக்கு அருகாமையில் வசித்து வந்த 180 குடும்பங்களை அவ்விடத்திலிருந்து அகற்றி பொருத்தமான இடத்தில் குடியமர்த்துவதற்காக அரச தலையீட்டுடன் கொழும்பு மாநகர சபை ஒரு வீட்டிற்காக மாதமொன்றிற்கு 15,000.00 ரூபாய் படி ஆறு மாதங்கள் நிதி ஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனினும், சில குடியிருப்பாளர்கள் அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு காட்டும் தயக்கம் இவ் அனர்த்தத்திற்கு பிரதான காரணமாக உள்ளமை தெரியவந்துள்ளது.
அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட அனர்த்தத்திற்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட குழு மூலமாக தேவையான நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து செயற்படுத்தப்படுவதோடு, இடர் முகாமைத்துவ அமைச்சு, நீதி மற்றும் அமைதி மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, முப்படை வீரர்கள், விசேட படையினர், பொலீஸ் மற்றும் கொழும்பு மாநகர சபை உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தற்பொழுது அவசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.
இந் நிவாரண சேவை மேற்க்கொள்ளுகையில் அருகாமையிலுள்ள மக்களின் பங்களிப்பு அவசியமென்பதால் இச் சேவைக்குப் பங்களிக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
எம். ஜீ. ஜயதிஸ்ஸ
தகவல் பணிப்பாளர்
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகத்திற்கு பதிலாக