தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகமும் ரணவிரு நலன்புரி அமைப்பும் இணைந்து பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படையினரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்
சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா மட்டக்களப்பில் நேற்று (12) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் காலை நிகழ்வுகளாக ஆண் பெண் சைக்கிள் ஓட்டப்போட்டி, ஆண் பெண் மரதன் ஓட்டப்போட்டிகள் நடைபெற்றன. அத்துடன், தலையணைச் சமர், வழுக்கு மரம் ஏறுதல், யானைக்கு கண்வைத்தல், ரபான் அடித்தல், ஓலை மட்டை இளைத்தல், முட்டி உழைத்தல், கபடி, ஆணழகன், அழகுராணிப்போட்டிகள் என்பனவும் நடைபெற்றன.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்சார்ள்ஸ் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக ரணவிரு அதிகார சபையின் உப தலைவி உபுலாங்களின மாபலகம,பொலிஸ் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.