பாற்பொருள் உற்பத்திகளுக்காக எடுக்கப்படும் பசும்பாலின் சுகாதாரம் மற்றும் தரம் என்பதை கண்டறிவது தொடர்பிலான பயிற்சி செயலமர்வொன்று இம்மாதம் 28ம் திகதி இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி
சபையின் தொழில் நுட்ப பிரிவினால் நடத்தப்படவுள்ளது.
பால் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரத் தன்மை என்பன பயன்படுத்தப்படும் பசும்பாலில் தங்கியுள்ளது. வியாபார நோக்கில் தரமற்ற பாலை பயன்படுத்தப்படுவதுடன் பல்வேறு இரசாயன பொருட்களை கலப்படம் செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாற்பொருட்களின் தரம் குறைவடைகிறது.
இவற்றைக் கவனத்தில் கொண்டு, பாலின் தரத்தை ( பாலாடை, ஆடையல்லாத கனப்பொருள்), தேவையற்ற பொருட்களை கலக்கப்பட்ட பாலை பரிசோதித்தல், நுண்ணுயிர் பரிசோதனை மற்றும் பாற்பொருள் உற்பத்தி கைத்தொழிலில் தரமான முறைகளை கையாள்வது தொடர்பில் செயன்முறை பயிற்சிகள் இப்பயிற்சி செயலமர்வில் வழங்கப்படவுள்ளன.
இப்பயிற்சி செயலமர்வில் கலந்துகொள்ள விரும்புவர்கள் பணிப்பாளர், தொழில்நுட்ப பிரிவு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை, 615, கட்டுபெத்த, மொரட்டுவ என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். 0112605278 தொலைபேசி இலக்கத்தில் அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு அல்லது நேரடியாக சென்றும் பயிற்சிக்காக பதிவு செய்துகொள்ளலாம்.