தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 'சமுர்த்தி அபிமானி -2017' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து சமுர்த்தி பயனாளிகளின் கைவினைப்பொருட்களின் கண்காட்சி நேற்று (08) நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
சமுர்த்தி பயனாளிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இச்சந்தையில், பன், தெங்கு மற்றும் பனம் பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட வீட்டுப் பாவனைப் பொருட்கள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், கைத்தறி உடுதுணிகள், அரிசி மாவினால் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகள், கழிவுப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட வீட்டிற்கான அலங்கரிப்புப் பொருட்கள், சுற்றாடலில் காணப்படும் காகிதங்களைக் கொண்டு செய்யப்பட்ட சிறுவர்களின் விளையாட்டப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்தையை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், சமுர்த்தி திணைக்கள குருநிதியப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ. வஹாப், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் வி. குணரட்ணம் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கண்காட்சிக் கூடத்தை திறந்து வைத்து பார்வையிட்டதோடு விற்பனையையும் ஆரம்பித்து வைத்தனர்.
நேற்றும் (08) இன்றும் (09) காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
LDA_dmu_batti