தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்புப்படையினரின் ஒத்துழைப்புடன் ரணவிரு நலன்புரி
அமைப்பின் அனுசரணையில் மாபெரும் விளையாட்டு விழாவும் கலை நிழ்ச்சியும் எதிர்வரும் 11ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
காலை 7 மணிமுதல் இவ்விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு ஆண் பெண் சைக்கிள் ஓட்டப்போட்டி மற்றும் ஆண்பெண் மரதன் ஓட்டப்போட்டிகளுடன் விழா ஆரம்பமாகவுள்ளது. பகல் 2 மணிமுதல் அழகு ராஜா, ராணிப் போட்டி, தலையணைச் சமர், வழுக்கு மரம் ஏறுதல், ரபான் அடித்தல், ஓலை மட்டை இளைத்தல், முட்டி உழைத்தல், மர்ம மனிதனைக்கண்டுபிடித்தல், கையிறு இழுத்தல் என்பன நடைபெறுகின்றன.
அத்துடன், யானைக்கு கண்வைத்தல், முட்டை உடைத்தல், பப்பாசிப்பழத்தின் விதை எண்ணுதல், தடை தாண்டி ஓடுதல், சங்கீதக்கதிரை ஆகியனவும் இடம்பெறும்.
அதே நேரம் சிறுவர்களுக்கான விளையாட்டுக்களான போத்தலில் தண்ணீர் நிரப்புதல், கரண்டியில் தேசிக்காய் கொண்டு ஓடுதல், பலூன் ஊதுதல், சிறுவர் அழகு ராஜா ராணிப் போட்டி, மிட்டாய் பொறுக்குதல் ஆகியனவும் இடம்பெறவுள்ளன.
LDA_dmu_batti