ஶ்ரீ சம்புத்த சாசனம் மற்றும் இலங்கை பிக்குகள் சாசனம் என்பவற்றை தனது அபரிமிதமான ஞானத்தினாலும், தர்ம சாஸ்திரங்கள் பற்றிய அறிவினாலும் வளப்படுத்தி வந்த ஶ்ரீ லங்கா அமரபுர மகா விகாரையின் அதி வண. தவுல்தென
ஞானீஸ்ஸர மகா நாயக்க தேரரின் மறைவு குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
அன்னாரது நல்லடக்க நிகழ்வுகளை பூரண அரச மரியாதையுடன் நிகழ்த்துவதற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், அந் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுமாறு புத்தசாசன அமைச்சருக்கும், உரிய அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவ்வாறே அதற்குரிய அனைத்து செலவுகளையும் அரசினால் மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதி வண. தவுல்தென ஞானீஸ்ஸர மகா நாயக்க தேரரின் இறுதி நிகழ்வுகள் இம் மாதம் 06 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.