மட்டக்களப்பு மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு சிறுபோகத்தில் பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசனங்களின் கீழ் 65750.5 ஏக்கர் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு முhவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் இன்று (04) தெரிவித்தார்.
இவ்வருடத்தின் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட ஆரம்பக்கூட்டங்களின் தீர்மானங்களின் அடிப்படையில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அதில், பெரிய நீர்ப்பாசனத்தின் கீழ் 54027 ஏக்கரிலும், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 11723.5 ஏக்கரிலும் இச் சிறுபோகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதன்படி, போரதீவுபற்று(வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவில் நவகரிரித்திட்டம் 15748 ஏக்கர், வெல்லாவெளி, பழுகாமம், மண்டூர் கமநல சேவை நிலையப்பிரிவுகளில் 1379 ஏக்கரும் செய்கை பண்ணப்படவுள்ளது.
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் புளுக்குணாவக் குளம், கடுக்காமுனைக் குளம், சேவகப்பற்று மேல் கிழல், அடைச்சகல் குளம் ஆகிய நீர்ப்பாசனத்தின் கீழும், கொக்கட்டிச்சோலை கமநல சேவை நிலையம், தந்தாந்தாமலை கமநல சேவை நிலைய பிரதேசங்களிலுமாக 5392 ஏக்கரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் உன்னிச்சை வலதுகரை வாய்க்கால், ஆற்றப்பாய்ச்சல், இடதுகரை வாய்க்கால் , மாகாண நீர்பாபாசனங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், மண்டபத்தடி, ஆயித்தியமலை கமநல சேவை நிலைய பிரிவுகளிலுமாக 12615.5 ஏக்கரில் செய்கை பண்ணப்படவுள்ளது.
கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரி, புணானை, மியான்கல், தரவை ஆகிய குளத்து நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளிலும், கிரான் மற்றும் வாழைச்சேனை கமநல சேவைப்பிரிவிலுமாக 10891 ஏக்கரில் செய்கைபண்ணப்படுகிறது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின், உறுகாமம், கித்துள்வெவ, வெலிகாகண்டி, ஆகிய குளங்களின் நீர்ப்பாசனத்திலும், ஏறாவூர், வந்தாறுமூலை, கரடியனாறு கமலந சேவைப்பிரிலுவுகளிலும் 12713 ஏக்கரில் செய்கை பண்ணப்படுகிறது.
கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், கட்டுமுறிவுத்திட்டம், மாகாண நீர்பாபசனம் செங்கலடிப்பிரிவு, மதுரங்கேணிக்குளம், ஆனைசுட்ட கட்டுக்குளம், வாகரை கமநல சேவைகள் நிலையம் ஆகியவற்றின் நீர்ப்பாசனப்பிரதேசங்களில் 3322 ஏக்கரிலும் செய்கை பண்ணப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அதேநேரம், நீர்ப்பற்றாக்குறை, நீரின்மை காரணமாக சில குளங்களின் நீர்ப்பாசனத்தில் செய்கை பண்ணப்படும் ஏக்கர்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், சில பிரதேசங்களின் நீர்ப்பாசனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பாறை மாவட்டத்தின் நீர்ப்பாசனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் 5000 ஏக்கருக்கும் மேற்பட்ட வேளாண்மைச் செய்கைக்கு நீர்ப்பாசனம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
LDA_dmu_batti