'உத்தமாபி வந்தனா ரங்க பெலஹரா' நாடக மேடையேற்றம் நாளை (03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெறவுள்ளது.
1818 ஊவா-வெல்லஸ்ஸ முதலாவது சுதந்திர தின புரட்சியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இம்மேடை நாடகம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அரச தகவல் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
நாடகக் கலைஞரும் பாடகருமான அல்விஸ் தயாரித்துள்ளார். இந்நாடகமானது பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட வீர கெப்பட்டிபொல உட்பட சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை சுதந்திர போராட்ட வீரர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வரலாற்றை கூறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது