‘யொவுன்புர 2017’ மாபெரும் இளைஞர் நிகழ்வு நேற்று (29) திருகோணமலை மக்கெய்சர் விளையாட்ரங்கில் மாலை 5.30 மணிளயவில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார். அவருடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 5,500 இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளதுடன் வெளிநாட்டிலிருந்தும் 100 இளைஞர்களும் வருகை தந்துள்ளனர்.
இந்த நிகழ்வுக்காக 1,500 உத்தியோகத்தர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.