• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

கிழக்கில் 4580 பேருக்கு டெங்கு, 18 பேர் பலி!

கிழக்கில் இதுவரை 4580 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. முருகானந்தம்
தெரிவித்துள்ளார்.
 
நேற்று (28) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் டெங்கு நோய் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கிழக்கில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
 
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் 2680 நோயாளிகள், மட்டக்கப்பு 960 நோயாளிகள் , கல்முனை, அம்பாறை சுகாதார சேவைகள் பிராந்தியங்களில் முறையே 827, 113 நோயாளர்களுமாக 4580 நோயாளிகளும் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
 
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 9 மரணங்களும் குறிஞ்சாக்கேணி பிரதேச சபைப் பிரிவுக்குள் 3 மரணங்களும், மூதூர், குச்சவெளி, திருகோணமலை பிரதேசங்களில் தலா ஒன்றுமாக 15 மரணங்கள் திருகோணமலை மாவட்டத்திலும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப்பிரதேசம், காத்தான்குடி, செங்கலடி பிரதேங்களிலுமாக 3 மரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சம்பவித்துள்ளன.
 
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப்பிரதேசத்தில் மரணித்தவர் கொழும்பில் வசித்து அங்கிருந்து நோய்த் தொற்றினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவராவார்.
 
டெங்கினைக்கட்டுப்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது மக்கள் தங்கது குடிமனைகளை தாங்களே துப்பரவு செய்யும்படியும் பணித்திருக்கின்றோம்.
 
அதற்கும்மேலதிகமாக கொழும்பிலிருந்தும் ஏனைய மாவட்டங்களிலிருந்தும் குறிப்பாக வட மாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களிலிருந்து புகை விசிறும் கருவிகளையும் அதிகாரிகளையும் பெற்று கிண்ணியா, திருகோணமலை மற்றும் ஏனைய பகுதிகளிலும் விசிறிக் கொண்டிருக்கிறோம். அத்தோடு உள்ளூராட்சிச் சபைகளின் உதவியோடு கிராமப்புறங்களில் இருக்கின்ற காணிகள், பாவிக்கப்படாத கிணறுகளையும் துப்பரவு செய்து கொண்டிருக்கிறோம்.
 
அதற்கு மேலதிகமான இன்புளுவன்சா, ஏ.எச்.என் 01 காணப்படும் இடங்களினை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமாகத் தேவையாக இருக்கிறது என்று தெரிவித்தார். 
 
LDA_dmu_batti

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.