தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வீதியை திறப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக பத்திரிகையில் செய்தி வௌியாகியுள்ளது எனினும் நல்லாட்சி ஆட்சியில் இருக்கும் வரை அப்பாதை திறக்கப்படாது என்று உயர் கல்வி மற்றும்
பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டி, குருதெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய வீதிகளை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் கண்டி நகரை விஸ்தரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும். கண்டி நகரில் காணப்படும் வாகன நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அரசு திட்மொன்றை வகுத்துள்ளது. இன்னும் இரு வருடங்களில் தென்னேக்கும்புரவில் இருந்து ஆரம்பிக்கப்படும் சுரங்க பாதை அமைப்பதற்கான திட்டம் நிர்மாணிக்கப்பட்டு கண்டியில் வாகன நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்டி, செங்கடகல தேர்தல் தொகுதியில் நீண்டகாலமாக அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படாதிருந்த மூன்று வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு அமைச்சர் கையளித்தார். குருதெனிய மவுண்ட் பெரடைஸ், குருதெனிய உடதென்ன வீதி மற்றும் குருதெனிய பழைய ஹங்குரங்கெத்த வீதி கொங்க்ரீட் போடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இவ்விதிகளின் புனர்நிர்மாணப்பணிக்காக 270 இலட்சம் ரூபா செலவாகியுள்ளது. இப்புனர்நிர்மாண பணிகள் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.