யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு கடந்த 2016ம் ஆண்டு 11,253 வீடுகளை நிர்மாணித்துள்ளது என அமைச்சர் டி.எம் சுவாமிநாதன்
தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் இவ்வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த அமைச்சினால் உடைந்த 2,170 வீடுகள், 171 பாதைகள், 41 பாலர் பாடசாலைகள், 29 பாடசாலைகள் மற்றும் 23 வைத்தியசாலைகளையும் தனது அமைச்சு புனர்நிர்மாணம் செய்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் 104 வீடுகளுக்கான இலவச மின்சார வசதிகள், 3,371 தண்ணீர் விநியோகங்கள், 47 குழாய் நீர் வசதிகள், ஒரு குடும்பத்திற்கு 100,000 ரூபா வீதம் 12,050 குடும்பங்களுக்கு வாழ்வாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 7,598 மலசலகூட வசதிகள், 1,202 பொதுக் கிணறுகள், 29 சமூக தண்ணீர் திட்டங்கள் என்பனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளது.